TA

இலவச ஆன்லைன் QR குறியீடுகள் உருவாக்கம் /வெக்டர், இயங்குநிலையில் மாறும், நிறம் /

QR குறியீடு வகையை தேர்வு செய்யவும்

ஒரு நிலையான QR குறியீடு என்பது தரவு நேரடியாக QR குறியீட்டில் குறியாக்கப்பட்டு இருக்கும். புதிய QR குறியீடு உருவாக்கம் இல்லாமல் மாற்ற முடியாது. நீங்கள் ஒரு QR குறியீடு குறியாக்கப்பட்டு இருக்கும் தகவலை பெற இணைய இணைப்பு தேவையில்லை (ஒரு இணைய இணைப்பு அல்லது ஒரு மின்னஞ்சல் முகவரி குறியிடப்பட்டுள்ளது என்றால், எந்த வகையான இணைப்பு குறியிடப்பட்டுள்ளது என்பது பற்றி சாதனம் தகவல் பெறும். ஆனால் இணைப்பிற்கு செல்ல அல்லது ஒரு மின்னஞ்சல் அனுப்ப, இணையத்துடன் இணைப்பு வேண்டும்.)
ஒரு டைனமிக் QR குறியீடு உள்ளடக்க மேலாண்மை பக்கதிற்கு ஒரு இணைப்பை கொண்டுள்ளது. அது ஒரு இணைய பக்கதிற்கு இணைப்பை கொண்டுள்ள நிலையான QR குறியீடு போன்றுதான். ஒரு டைனமிக் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது காட்டப்படும் தரவை ஏற்கனவே உள்ள QR குறியீட்டை மாற்றாமல் மாற்ற முடியும். நீங்கள் தகவல் பெற இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, அது இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இலவச நிலையான QR குறியீடு உருவாக்கம்

எந்த தேவையான உரையையும் QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். QR குறியீடு ஸ்கேன் போது உரை திரையில் காண்பிக்கப்படும்.

500
உங்கள் வணிக அட்டையை QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். நீங்கள் பயன்படுத்தும் QR குறியீடு ஸ்கேனிங் பயன்பாட்டை பொறுத்து, உங்கள் தொடர்பு தகவலை காட்டப்படும் அல்லது ஸ்மார்ட்போன் உங்கள் தொலைபேசி தொடர்பு புத்தகத்தில் தகவல்களைச் சேர்க்க வழி வழங்கும்.







ஒரு எஸ்எம்எஸ் செய்தியை QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். QR குறியீடு ஸ்கேன் செய்யும் போது பெறுநரின் எண், குறிப்பிட்ட உரை கொண்ட ஒரு திரை குறுஞ்செய்தி அனுப்ப திறக்கும். (பயன்படுத்தப்படுகின்ற ஸ்கேன் மென்பொருள் பொறுத்தது. அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை).


500
ஒரு மின்னஞ்சல் செய்தியை QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். QR குறியீடு ஸ்கேன் செய்யும் போது பெறுநரின் மின்னஞ்சல் முகவரி, குறிப்பிட்ட உரை கொண்ட ஒரு திரை மின்னஞ்சல் செய்தி அனுப்ப திறக்கும். (பயன்படுத்தப்படுகின்ற ஸ்கேன் மென்பொருள் பொறுத்தது. அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை).



500
உங்கள் WiFi பிணைய அணுக கடவுச்சொல்லை QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். குறியீடு ஸ்கேன் போது, ஏற்கனவே நிரப்பப்பட்ட கடவுச்சொல்லுடன் ஒரு நெட்வொர்க் இணைப்பு வழிகாட்டி திறக்கும். (பயன்படுத்தப்படுகின்ற ஸ்கேன் மென்பொருள் பொறுத்தது. அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை).


உங்கள் இணைய இணைப்பு, சமூக வலைப்பின்னல் பக்கம், அல்லது ஒரு பேபால் கட்டணம் இணைப்பை QR குறியீட்டில் குறியாக்கம் செய்யவும். QR குறியீடு ஸ்கேன் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் அந்த இணைய முகவரியை திறக்கும். (பயன்படுத்தப்படுகின்ற ஸ்கேன் மென்பொருள் பொறுத்தது. அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை).

இலவச டைனமிக் QR குறியீடு உருவாக்கம்

மன்னிக்கவும், நீங்கள் உங்கள் இயங்குநிலையில் மாறும் QR குறியீட்டில் தரவு சேர்க்க அல்லது திருத்த அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் பின்வரும் சமூக வலைப்பின்னல்களில் உங்கள் கணக்கை பயன்படுத்தி உள்நுழையலாம்:
உள்நுழைய Google
உள்நுழைய Facebook
உள்நுழைய Vk
உள்நுழைய Linkedin
வரவேற்கிறோம், [ வெளியேறு ]
நீங்கள் கீழே கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் பொது இணையத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும், எனவே உங்கள் தனிப்பட்ட தரவு எதையும் அளிக்க வேண்டாம்.
நீங்கள் இலவசமாக 3 இயங்குநிலையில் மாறும் QR குறியீடுகள் உருவாக்க முடியும். நீங்கள் இப்போது திருத்திக் கொண்டிருப்பதில், தயவு செய்து கவனிக்கவும்:
படம் இல்லைX


250

5000





QR குறியீடு தன்விருப்ப பாணியில் அமைப்பது

QR குறியீடு அளவு: x3
அடிப்படை (குறைந்தபட்ச சாத்திய) QR குறியீடு படம் என்ன அளவில் பெரிதாக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. இது ராஸ்டர் படங்களுக்கு முக்கியம்.
QR குறியீடு தேவைக்கு அதிகமாய் இருத்தல்: x1
QR குறியீட்டில் பதிக்கப்பட்டுள்ள பிழை திருத்தம் நிலையை குறிக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஒரு சிதைந்த QR குறியீட்டில் இருந்து தரவு பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம், ஆனால் QR குறியீட்டின் அளவும் அதிகமாகும்.
ஒளி ஊடுருவும் தன்மை: 1
கோப்பு வடிவம்:
PNG - பிட்மேப் படம். சாதாரண சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும். அளவிடுதல் போது சிதைந்துவிடலாம்.
SVG - வெக்டார் படம். வலைத்தளங்களில் பதிக்கப்படலாம் மற்றும் பல்வேறு வெக்டார் செயலியில் இறக்குமதி செய்யலாம்.
EPS - வெக்டார் படம். பதிப்புவெளியீட்டு செயலியில் வேலை செய்யும் போது பயன்படுத்தப்படுவது (இந்த பதிப்பில் வெளிப்படைத்தன்மை அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை).

QR குறியீடு என்றால் என்ன?

QR குறியீடுகள் எங்கே, எப்படி பயன்படுத்தப்படுகின்றன? எது சிறந்தது: இயங்குநிலை (டைனமிக்) அல்லது நிலையான குறியீடுகள்?

QR குறியீடு என்பதன் விரிவாக்கம் "Quick Response Code" "விரைவாக பதில் தரும் குறியீடு" ஆகும். எளிமையாக, முதன் முதலில் "சதுர பார் குறியீடுகள்" என்று தானியங்கி தொழில் துறைக்காக ஜப்பானில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஒரு பயனரிடம் இருந்து ஸ்மார்ட்போன்க்கு தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் இவை, காலண்டர் நிகழ்வுகள், தொலைபேசி எண்கள், குறுஞ்செய்திகள், தயாரிப்பு விவரங்கள், மின்னஞ்சல் செய்திகள் என பல்வகையான தகவல்கலை சேமிக்க பயன்படுகிறது. இவைகள் மேம்பட்ட மற்றும் இயந்திரங்களால் படிக்கக்கூடிய UPC பார்கோடுகள் போன்று செயல்படுகின்றன. தயாரிப்புகளின் பேக்கேஜிங், விளம்பர பலகைகள், விசிடிங் கார்டு, வணிக ஜன்னல்களில், விளம்பரங்கள் மற்றும் பொருட்களை கண்காணிக்க மற்றும் பொருட்களை அடையாளம் கொள்ள பயன்படுத்த முடியும்.

ஒரு QR குறியீட்டை படிக்க, அண்ட்ராய்டு போன்களில் "QR droid", iOS க்கு "RedLaser" மற்றும் பிளாக்பெர்ரிக்கு “QR code Scanner Pro” என்று உங்கள் டேப்லேட் அல்லது ஸ்மார்ட்போனில் QR குறியீடு வாசகர் பயன்பாட்டை நிறுவ வேண்டும். QR பயன்பாட்டை தொடங்கியவுடன் கேமரா தானாகவே ஆன் ஆகிவிடும். QR குறியீட்டுக்கு நேராக கேமராவை அசையாமல் வைக்கவும். QR பயன்பாடு ஒரு ஒலி எழுப்பியவுடன், குறியீட்டில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்களையும் காட்டும். சில பயன்பாடுகள் உங்கள் வலை உலாவியில் குறியீட்டில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட இணைப்பிற்கு உங்களை எடுத்து செல்லும்.

QR குறியீடுகள் எங்கே, எப்படி பயன்படுத்தப்படுகின்றன?

உங்களை பற்றிய தகவலை பகிர்வதில் இருந்து வணிக மார்க்கெட்டிங் செய்வது வரை QR குறியீடுகளை பல வழிகளில் பயன்படுத்தலாம். QR குறியீடுகள் பயன்படுத்துவது குறித்து ஒரு சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. :

வணிக அட்டைகள் (விசிடிங் கார்டு)/ விளம்பர பொருட்கள்

உங்கள் வணிக அட்டைகள், தகவல் மற்றும் பிரசுரங்கள் மீது QR குறியீடுகள் அச்சிடுவதால், இதனை ஸ்கேன் செய்தவுடன் ஒரு ஸ்மார்ட்போனில் முகவரி புத்தகத்தில் உங்கள் தொடர்பு விவரங்கள் சேமிக்கபடும் அல்லது உங்கள் வணிகத்தை பற்றிய ஒரு விரிவான விளக்க வலைப்பக்கத்தை காண்பிக்க முடியும். இவைகளை சுய விளம்பரத்துக்காக டி-ஷர்ட்டுகளில் இருந்து விளம்பர பலகைகள் மற்றும் விமானத்தில் கூட, எல்லா இடங்களிலும் எதையும் அச்சிட முடியும்.

நிகழ்வு டிக்கெட்

நீங்கள் ஒரு நிகழ்விற்கான ஒருங்கிணைப்பாளர் என்றால், ஒரு QR குறியீடு சேர்த்து அதில் ஒரு RSVP பக்கதிற்கான (பிரஞ்சு வார்த்தையின் சுருக்கம் - பதில் அளியுங்கள் என்று அர்த்தம்), இணைப்பையும், நிகழ்வு நடக்கும் இடத்தின் ஜிபிஎஸ் குறிகளை அளிக்கலாம். இதன் மூலம் ஒரு பார்வையாளர் அவரது வருகையை உறுதி செய்ய முடியும் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அவரது ஸ்மார்ட்போனில் உள்ள வழி காட்டும் பயன்பாட்டில் குறித்து கொள்ள முடியும்.

தயாரிப்பு பேக்கேஜிங் / தயாரிப்பு கண்காணிப்பு / வாடிக்கையாளர் விமர்சனங்கள், அனைத்தும் நேரடியாக

நீங்கள் தயாரிப்பு பேக்கேஜிங் செய்த பின் அதில் இறுதியாக QR குறியீடுகள் சேர்த்து உங்கள் வணிகம் மற்றும் பொருட்களை பற்றிய வலை பக்கதிற்கு வாடிக்கையாளர்களை இணைக்க முடியும். இணைப்பில் தயாரிப்பின் விளக்கம் மற்றும் அதன் நன்மைகள், பயனர் கையேடுகள், வாடிக்கையாளர் சேவை தொடர்புகள் மற்றும் நிறுவனத்தை பற்றிய பொது தகவல்கள் தர முடியும்.

Our sponsor

Ninkeri

Ninkeri® cosmetics from Australia

  • Only natural components
  • Premium quality
  • Carefull manufacturing
  • Natural and organic ingredients are derived from Australia’s flora

Learn more ...